யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நுணாவில்‚ நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி இளையதம்பி அவர்கள் 08-12-2020 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிதம்பரஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா இளையதம்பி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற கெங்கைவேந்தன்(தவம்), தேவகுமார்(கண்ணன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மி(நெதர்லாந்து)‚ அருள்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா‚ நடராசா மற்றும் பகவதியம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான கனகசபை‚ கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசமணி‚ சிதம்பரராசா‚ மயில்வாகனம்‚ அழகம்மா மற்றும் சிவஞானம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
குவேன்‚ குலா‚ குமரன்(நெதர்லாந்து)‚ திவ்யா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கீர்த்தனா‚ சஞ்சய்‚ சுவேதா‚ சுஜிதன்‚ சுயன்‚ சாகசன்‚ அமரன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
நாட்டில் எற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அரச விதிகளுக்கு அமைய 50 உறவினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.