Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1976
இறப்பு 25 MAR 2025
திரு மனோஜ் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
வயது 48
திரு மனோஜ் பாரதிராஜா 1976 - 2025 தேனி, India India
Tribute 48 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

இந்தியா தேனி கம்பத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இயக்குனரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இயக்குநர் இமயம் பாரதிராஜா சந்திரலீலா தம்பதிகளின் அன்பு மகனும், நந்தனா அவர்களின் அன்புக் கணவரும், ஆர்த்திகா, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

மனோஜ் அவர்கள் நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ்த் திரையுலகில், உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பொம்மலாட்டம் திரைப்படத்தில் தனது தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். இவர் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளைப் பயின்றுள்ளார்.

மனோஜ் அவர்கள் 1999-ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். அதைத் தொடர்ந்து, சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து சமுத்திரம் திரைப்படத்திலும், தனது தந்தை இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் தோன்றினார். பின்னர் அவர் சரணின் அல்லி அர்ஜுனாவில் முன்னணி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், இவர் சத்யராஜின் மகா நடிகன் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். வெளியிடப்படாத தெலுங்கு படமான லெமனில் எதிர்மறை வேடத்திலும் நடித்திருக்கிறார்.

தன் தந்தையின் படமான ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர் படத்திலும், பிரபல திரைப்படப் படைப்பாளியான மணிரத்னத்தின் படங்களிலும் உதவியாளராகப் பணியாற்றினார். 2008 முதல் 2010 வரை, இயக்குனர் எஸ். ஷங்கரின் பிரமாண்டமான படைப்பான எந்திரனில் உதவியாளராகப் பணியாற்றினார். 2007 முதல், மனோஜ் அவர்கள் தனது தந்தையின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை மறு ஆக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் இன்னும் முன் தயாரிப்பில் உள்ளது. 2012 ஆம் ஆண்டில், இவரது தந்தை தனது தயாரிப்பான அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்க அமீருக்குப் பதிலாக இவரை ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதயப்பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவர் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தனது சிறந்த நடிப்பினால் மக்கள் மனங்களை வென்ற மனோஜ் பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.  

தகவல்: RIPBOOK

Summary

Photos

Notices