Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 DEC 1962
இறப்பு 12 AUG 2026
திரு மனோகரன் தியாகராஜா (தீரன்)
வயது 63
திரு மனோகரன் தியாகராஜா 1962 - 2026 கரம்பன், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham-தை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 நாட்கள் 31 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு இன்னும் மறையவில்லையே!!

எம் குலதெய்வமே உங்கள் பாதம் தொட்டு பணிகின்றோம்.
அன்பு பெருக எம்மை அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய உங்கள் பாசமடியும்
இன்பம் தந்த உங்கள் இனிய சொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்து துடிக்கின்றோம்.

பாவிகள் நாங்கள் உங்கள் நினைவில்
பரிதவித்து நிற்கின்றோம் இன்று.
காலங்கள் கடந்து போகலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் மட்டும் காலத்தை வென்று
என்றும் எம்மிடத்தில் நிலைத்திருக்கும்
எம் கண்கள் நிறைந்த கண்ணீரோடு.

இன்றுடன் ஒரு மாதம் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் எம்மை விட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 37 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 13 Aug, 2026