கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பளை, ஜேர்மனி Berlin, Warendorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கொக்குவிலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
விஷ்ணுகாந்தன்(ஆசிரியர்), குகதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன், யோகானந்தன், விவேகானந்தன் மற்றும் சச்சிதானந்தன்(கனடா), காலஞ்சென்ற ஜெயானந்தன் மற்றும் முருகானந்தன்(ஓய்வு பெற்ற அதிபர்), சிவானந்தன்(ஓய்வு பெற்ற தபால் ஊழியர்), சண்முகானந்தன்(ஓய்வு பெற்ற உதவி திட்டமிடல் மணிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தாரணி(ஆசிரியை), துஷ்யந்தன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
கேதாகினி, தட்சாகினி, சங்கவி, தஷ்வின், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் ஞானசேகரம், ஞானசெளந்தரி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜநிதி, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
To all grieving families, please accept our heartfelt condolences. Our thoughts and prayers are with you at this difficult time. Sangerappillay family, Sandilipay