யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராசா பிரசாத் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆருயிராய் இருந்த எங்கள் செல்வமே
உயிர் பிரிந்து முப்பத்தொரு நாளானதே...!
கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாத பெரும் பேற்றை
நாமடைந்தோம் உன் பிறப்பால்
எங்கள் வாழ்வே சரிந்ததுபோல் ஆகிவிட்டோம்
உன் மறைவால்!
உன் மகிழ்வே எங்கள் வாழ்வென்று நாமிருந்தோம்
எம்மை தவிக்கவிட்டு இடை நடுவே பிரிந்ததேனோ?
பெற்றவனே பிள்ளைக்குகொள்ளி
வைக்கும் கொடுமையை நீ தந்ததேனோ?
அன்பை அமுதமாய் ஊட்டி வளர்த்தோமே
மாறாத பாசத்தை பதிலுக்குத் தந்தாயே எங்களுக்கு!
குடும்பத்தின் குலக்கொழுந்தாய் இருந்த உன்னை
இளவயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததே எங்களுக்கு!
நீ மறைந்தது மட்டும் கனவாக கூடாதா?
உன்னையே எண்ணி தவிக்கின்றோம்
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.