Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 27 JUL 1934
விண்ணில் 02 NOV 2020
அமரர் மாணிக்கத்தியாகராசா கமலாதேவி
வயது 86
அமரர் மாணிக்கத்தியாகராசா கமலாதேவி 1934 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கத்தியாகராசா கமலாதேவி அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், வெங்கடாசலம் தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கத்தியாகராசா(ஜவுளிக்கடை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஹரீந்திரன்(கொரியா), ரதிகலா(மாலா), றமணாகரன்(ராசன்), ரதிமாலினி, மகாலக்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரெட்ணம், காலஞ்சென்ற சிவரூபராணி(இந்திரா), சரோஜினிதேவி, கஜலக்சுமிதேவி(குட்டிக்கிளி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

கமலாவதி, சிவகுமார், கலைச்செல்வி, நாகரெத்தினம்(பிரபு), சசிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறி, ஆனந், பூங்கதிர், பரந்தாமன்(அப்பர்), தமிழினி, நிவேதிதா, ஹரீந்திரன், கிருத்திகா, திவ்யா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எமர்சன் கரிகாலன், லாபிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில்  ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்