யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சாந்தகுமார் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழினி(சுவிஸ்), அமலதாசன், கோகிலவேணி, யசோதரன்(Finland) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரன்(சுவிஸ்), யோகமாலர், தேவராணி(லண்டன்), யோகேஸ்வரி, சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்கா(சுவிஸ்), சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,
உதயன், புஸ்பா, வதனி, யோகேஸ்வரன், சண்முகபாலன்(லண்டன்), நகுலேஸ்வரன், வாணி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சாளினி, கபிலன், சுவி, ஜீதன்(சுவிஸ்), டானியல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து காரைநகர் பிட்டியெல்லை சமூக மேம்பாட்டு கழக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பிட்டியெல்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.