Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1939
இறப்பு 03 FEB 2021
அமரர் மாணிக்கவாசகர் இராசையா (தவதாஸ்)
துறைமுகஅதிகாரசபை- திருகோணமலை, Oferr- கழக ஆற்றுப்படுத்தல் பகுதி பொறுப்பாளர் - ஈழ ஏதிலிதியர் மறுவாழ்வுக் கழகம், இந்தியா
வயது 82
அமரர் மாணிக்கவாசகர் இராசையா 1939 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் இராசையா அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, குணபூசனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌரி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரிவாசுகி(ஜேர்மனி), கௌரிவசந்தி(டென்மார்க்), கௌரிவத்சலா(பிரான்ஸ்), கௌரிவரணி(லண்டன்), சுரேஷ்கண்ணா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோமனிஸ்(ஜேர்மனி), தயாராஜன்(டென்மார்க்), கணேஸ்ராஜ்(பிரான்ஸ்), கலாநிதி(லண்டன்), கோடிஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணதேவி, இராஜேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரன்(திருகோணமலை), ஸ்ரீதேவி(திருகோணமலை), காலஞ்சென்ற சுகீர்தராஜன், இராஜலட்சுமி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சோதிநாதன், சிவநாயகம் மற்றும் சிவரட்னராஜா(திருகோணமலை), நிரூபன்(டென்மார்க்), இராஜதேவி(திருகோணமலை), ரதிச்செல்வி(திருகோணமலை), அம்பலவாணர்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(திருகோணமலை), காலஞ்சென்ற புண்ணியநாதன், குகானந்தன்(திருகோணமலை), அருந்ததி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெலனா, வரேனா, டானிலா, தோமா, டேவி, துஷாந், வசந்த், ரஷ்மி, மெலீனா, சயந்தவி, ஜிவோஸ், ஜினிஷா, ஜினேஸ், ஜிரேஸ், ஜிரேஷா, உவைய், புவிதாஸ், ஸங்கீதா, விசாகன், மதியூ ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

பிரியா, ரோமன், சோயே, மாயா, அஷ்யா, தியா, அமெல், ஆதி, ஆதிதியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேலங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்