Clicky

அமரர் மாணிக்கம் யோகரட்ணம் (யோகன்)
வர்த்தகர்
இறப்பு - 18 MAR 2021
அமரர் மாணிக்கம் யோகரட்ணம் 2021 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் (பிரான்சு) 23 MAR 2021 France

ஆழ்ந்த இரங்கல்! கரம்பன் கிராமத்தில் புகழ்பெற்ற வர்த்தகராகவும் சமாதான நீதவானாகவும் இருந்த இ. மாணிக்கம் அவர்களது மகன் மாணிக்கம் யோகரட்ணம் அவர்கள் காலமாகிவிட்டார் எனும் தகவல் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக எட்டுகிறது. இத்தகைய பிரிவுச் செய்திகள் கிளறும் நினைவு அதிர்வலைகள் மனத்திரையில் சில அசையும் காட்சிகளை பிரதியிடுகின்றன. லைடன் தீவகத்தில் ஊர்காவற்றுறை கரம்பன் கிராமத்தில் 1960களில் யானைகளை வரவழைத்துக் காட்டிய தனித்துவப் பெருமை கொண்டது இ.மாணிக்கம் அவர்களது குடும்பம். அக்காலத்தில் நாம் சிறார்களாக முதன்முதலாக அந்த யானைகளைக் கண்டு பிரமித்துப் போனதும் அது சாப்பிடும் அளவைக் கண்டு அரண்டுபோனதுமான காட்சியை வாழ்நாளில் மறக்கவே முடியாதது. காலங்கள் கரைகின்றன.. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனவாத வன்கொடுமைகளால் தூக்கி வீசப்பட்டவர்களாய் புவியெங்கும் விரவி வெவ்வேறு தடப் பயணமாகிப் போனது நம்மவர் வாழ்வு. எமது சந்ததியினரும் பூர்வீக ஊரோ - சுற்றமோ அறியாதோராய் கண்டங்கள் கடந்தோராய் தமக்கான திசைப் பயணத்தைத் தொடங்கியும் விட்டனர். மண்ணின் மைந்தர்களென தமது பெயருடன் ஊரைச் சுட்டும் மரபார்ந்த வழக்கம் நீர்த்துப் போகிறது. பெருமூச்சுகள்தான் வடிகாலாகின்றன. கண்டங்கள் கடந்த புலப்பெயர்வின் நீட்சியில் உலகம் முழுவதுமாய் தனிமைப்படுத்தி முடங்கிய கொரோனா 2020-21வது ஆண்டு காலத்தில் நிகழ்ந்த இவரது பிரிவு குடும்பங்களாக ஒருங்கிணைந்து அழுது ஆற்றுப்படுத்தும் இறுதிச் சந்தர்ப்பத்தையும் துண்டித்தது கொடிதினும் கொடிது. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339 - நிலையாமை) பிறப்பு-இறப்பு நிலையாமை நியதியை ஏற்றவராய் ஆழ்ந்த இரங்கல்! இவரின் இறப்பால் துயருறும் குடும்பத்தார் உறவினர் சுற்றத்தினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறோம். - முகுந்தன் குடும்பம் (பிரான்சு) - கரம்பன் சங்கரப்பிள்ளை அப்பு அவர்களது மகள்வழிப் பேரன் கந்தையா - தனலட்சுமி குடும்பத்தினர் (கந்தையா மாஸ்டர்) சார்பாக சுற்றத்தினர்