

யாழ். தென்மராட்சி கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் நாகேந்திரம் அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், முத்தம்மா தம்பதிகளின் மூத்த மகனும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மருமகனும்,
ஞானகலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நிசாலினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், நவரத்தினம்(உரிமையாளர்- பழமுதிர்சோலை கெற்பேலி), பாலசிங்கம்(பிரதி அதிபர்- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை), யோகேந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமாரசாமி, விமலேஸ்வரி, பாலேஸ்வரி(ஆசிரியை), குமுதினி, சந்திரோதயம், சகுந்தலாதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நேசதுரை ஆகியோரின் அன்புச் சகலனும்,
நவநீதன்(ஐக்கிய அமெரிக்கா), நிதர்சன்(பெல்ஜியம்), நிதர்சினி, காலஞ்சென்ற நிசாலினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிவேதா, நிரோசன், நிதர்சனா, நிகிந்தா, ராகுலன், தனுசன், நிதுசன், யோசிகா, திரிசா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சிறிறஞ்சனி(இத்தாலி), உதயகுமார்(சுவிஸ்), சுயாதா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்வாய் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.