
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், பண்டிதர் தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணமலர்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.சத்யா தேவபாலன்(பிரித்தானியா), ஐங்கரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவயோகம் மற்றும் சிவஞானம், காலஞ்சென்ற சிவக்கொழுந்து மற்றும் கமலாதேவி, கெங்காதரராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவபாலன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதிபன்சாயி, அரண்சாயி, இனியாள் வாணி ஆகியோரின் அன்புப் பாட்டானரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-08-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 முதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி. ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94765566060
- Phone : +94776688558