மரண அறிவித்தல்
தோற்றம் 28 JUN 1944
மறைவு 04 DEC 2021
திரு மாணிக்கம் பாலசிங்கம்
குமரன் சில்க்ஸ் Main Street
வயது 77
திரு மாணிக்கம் பாலசிங்கம் 1944 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாலசிங்கம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள்(சிலோன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன்(லண்டன்), சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம், அன்னலெட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, வரதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்கையற்கரசி, ரத்தினபூபதி, காலஞ்சென்ற முருகேசு, மங்களேஸ்வரி, சாரதா, சற்குணராஜா, சறோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இன்பராணி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதாம்பாள்(சிலோன்மணி) - மனைவி
சசிகலா - மருமகள்
சற்குணராஜா - மைத்துனர்