

கண்ணீர் அஞ்சலி திருமதி மங்களரூபா ஜோசேப் அமைதியுடன் உமது ஆன்மா இறைவன் சந்நிதானத்தில் இளைப்பாறட்டும் அன்பான உமது உயிர் அவசரமாகப் பிரிந்ததுவோ ஆறாத துயரத்துடன் அழுகின்றோம் . அம்மா நீ உண்மையான அன்போடு மாமா மாமியென்று அழைக்கும் குரல் இப்பொழுதும் காதில் ஒலிக்கிறது. உன் பிரிவுச் செய்தி கேட்டதும் எல்லா உறவுகளின் கண்களிலும் கண்ணீராறு பெருக்கெடுத்து ஓடுகிறதே. இனி உன் பூ முகம் காண்பதெப்போ? அடிக்கடி உன் சிரித்த முகம் கண்முன்னே தோன்றும் .உன் அளப்பரிய சேவைகள் யாவும் எங்கள் எல்லோரது இதயங்களிலும் நிறைந்துள்ளன. உன் அழகான சிரிப்பு உன் கலகலப்பான வேடிக்கைப் பேச்சுக்களால் எல்லோரையும் சிரிக்க வைப்பாயே அதை எங்களால் மறக்க முடியுமா. அனைவரையும் உன் அன்பான பேச்சால் ஈர்ப்பாயே உன் உறவுகளைக் கண்டதும் அன்புடன் உபசரிப்பாயே. புன்னகையே உருவானவளே உன் பூ முகத்தை மறந்திடுமோ நெஞ்சம். உண்ணாமல் உறங்காமல் தவித்திருக்கும் உன் அன்புக் கணவரையும் அருமைப் பிள்ளைகளையும் அரவணைக்கும் தாயே உமது இழப்பின் துயரை ஆற்ற வழியில்லையே. கலங்கும் நெஞ்சத்துடனும் கண்ணீர்த் துளிகளுடனும் உமது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் பிரியா விடை தரும் உறவுகள் ராசு மாமா குடும்பத்தினர்