
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
ஜெயமலர்(ஓய்வுநிலை உப பீடாதிபதி), மைதிலி(வைத்தியர்), மனோராமா(ஜேர்மனி), மகபதி(ஜேர்மனி), மஞ்சுளா(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தியாகலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்), Dr அருளேந்திரன்(வைத்திய நிபுணர்), குகானந்தன்(ஜேர்மனி), விஜிதா(ஜேர்மனி), ஸ்ரீரங்கநாதன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரணி, தியாசாயணி, மயூரசாகித்தியன்,கிருஸ்ணவி,சங்கவி,வைஷ்ணவி,விஷ்ணவி ஆகியோரின் அன்புச் சித்தியும்
லுக்சியா, டினுஜன்,பவனிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜெனுசன், நந்தகிசோர், பிரதாயினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சேந்தன்(வைத்தியர்- அவுஸ்திரேலியா), கபிலன் (வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமியும்,
தண்மயி, தெய்வீகன், காவியன், ஆத்மன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற கனகராஜா, காலஞ்சென்றவர்களான கந்தையா, சாமிநாதன், திருநாவுக்கரசு(வைத்தியர்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற வரதலிங்கம்(அதிபர்) மற்றும் சரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, மீனாட்சி, வாலாம்பிகை, மற்றும் விசாலாட்சி ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 06:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-04-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிரியை நடைபெற்று, பி.ப 12:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94760291953
- Mobile : +94714872723
- Mobile : +491785851806
- Mobile : +491748104040