1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் இந்திராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எம்மை எல்லாம்
பெற்று வளர்த்த அன்புத் தெய்வமே
உங்கள் திடீர் மறைவினால்
நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!
உங்கள் முகம் காணாது துடிக்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் ஆயுள் உள்ளவரை
எங்கள் இதயத்திலிருந்து
பிரிக்கமுடியாது தாயே!!
காலக்கணிப்பில் ஓராண்டு கரைந்திருக்கலாம்
காயம் இன்னும் ஆறவில்லை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உருமறைந்து போனாலும் எம்
உள்ளமதில் வாழ்கின்றீர்.
ஆழ் மனக்கிடங்கில் உம்
நினைவுகளைப் பதிய வைத்து
பொக்கிஷமாய் - என்றும் பூஜிப்போம்...
ஓம் சாந்தி!- சாந்தி- சாந்தி
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வு 14-09-2022 புதன்கிழமை அன்று 58 சிவபுரம் வவுனிக்குளத்தில் நடைபெறும்.
தகவல்:
சத்தியசீலன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சத்தியசீலன் - மருமகன்
- Contact Request Details