Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 26 OCT 1947
உதிர்வு 04 SEP 2015
அமரர் மகேஸ்வரி வைத்திலிங்கம்
வயது 67
அமரர் மகேஸ்வரி வைத்திலிங்கம் 1947 - 2015 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி வைத்திலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா

கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!

சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!

விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும் அம்மா

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள்
உயிர் விலகி நிற்கின்றது அம்மா

துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த என் அம்மாவை
ஆண்டவன் ஏன் அழைத்தானோ..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute