1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1936
இறப்பு 16 MAY 2020
அமரர் மகேஸ்வரி வயிரவப்பிள்ளை 1936 - 2020 தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை கிழக்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வயிரவப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்