14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி இராசையா
வயது 74
அமரர் மகேஸ்வரி இராசையா
1937 -
2012
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி இராசையா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பதினான்கு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!
தகவல்:
குடும்பத்தினர்