யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
நான் பார்த்த முதல் முகம் நீ,
நான் கேட்ட முதல் குரல் நீ,
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே,
என் தாயே !
நான் வாழ்ந்த முதல் அறை நீ,
நான் வரைந்த முதல் படம் நீ,
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
என் தாயே !
சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்,
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்,
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்,,
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்,
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை,
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்,
ஆசையோடு தான்
உன் வாசம் எனக்கு வலிமை தரும்.
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்.
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே ! என் தாயே !
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே !
எல்லாம் மாறுமே அம்மா !
நீயே எனக்கென பிறந்தாயே !
அனைத்தையும் எனக்கு தந்தாயே !
என் உலகம் நீயே என் தாயே, அம்மா !!
அம்மா நீங்கள் உடலால் எங்களை விட்டு பிரிந்து 30 ஆண்டுகள்
ஆனாலும் இன்றும் என்றும் எங்களில், எங்கள் மனங்களில்
வாழ்ந்து வருகின்றீர்கள், எங்கள் உயிர் இருக்கும் வரையில்
எம்முள்ளே எப்போதும் வாழ்வீர்கள் அம்மா !