Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 MAY 1937
இறைவன் அடியில் 26 APR 2023
அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி
Vahini Textiles Jaffna, Vahini Stores Colombo
வயது 85
அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி 1937 - 2023 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:23/04/2026

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கனடா Newmarket ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்

எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர் 

உயிர் தந்த எம் அன்னையே!
மூன்று ஆண்டுகள் போனதம்மா
உன் முகம் பாராமல்

குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே

நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices