Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 06 NOV 1948
மறைவு 22 JUN 2020
அமரர் மகேஸ்வரன் நகுலேஸ்வரி (ராணி)
வயது 71
அமரர் மகேஸ்வரன் நகுலேஸ்வரி 1948 - 2020 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரன் நகுலேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷாந்தி, சிந்துஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கணேஸ் மற்றும் இராஜேஸ்வரி, சறோஜினிதேவி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வச்சந்திரன், அசோக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிணிக்கா, சுவர்ணிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

"அன்பின் அகராதியாய் அமைதியின் சிகரமாய்
என்றும் எம் வாழ்வில் இன்பங்களை அள்ளித்தந்து
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்ட எங்கள்
குடும்பத் தலைவி"

திருமதி மகேஸ்வரன் நகுலேஸ்வரி(ராணி) அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து எம் இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களிற்கும், அனுதாபச் செய்திகளை அனுப்பியவர்களிற்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களிற்கும், மலர் மாலைகள் மலர் வளையங்கள் அனுப்பியவர்களிற்கும் மற்றும் சகல  வழியிலும் எமக்கு உதவி செய்தவர்களிற்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து  ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - கணவர்
கிருஷாந்தி - மகள்
சிந்துஷா - மகள்
சண்முகநாதன் - சகோதரன்

Photos

No Photos

Notices