Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 OCT 1938
மறைவு 10 DEC 2019
அமரர் மகேஸ்வரி நடேசபிள்ளை 1938 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர்வீதி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடேசபிள்ளை அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சுந்தரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவஞானபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை(கடை அப்பு) அவர்களின் ஆருயிர் துணைவியும்,

ஞானவேல்(விரிவுரையாளர்- மகரகம தேசிய கல்வியிற் கல்லூரி), நாகநந்தினி(கனடா), மதனரூபா(ஆசிரியர்- வ/நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்), சக்திவேல்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, இராசம்மா, நாகரெத்தினம் மற்றும் உலகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், லோகேஸ்வரி, கனகரத்தினம் மற்றும் நாகேஸ்வரி, விமலாதேவி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகதாரிணி(ஆசிரியை- கொ/நல்லாயன் கன்னியர் மடம், கொட்டாஞ்சேனை), ஞானகுருபரன்(மகாவலி ஸ்டார்- கொழும்பு, கனடா), கருணாநிதி(விவசாயத் திணைக்களம்- செட்டிக்குளம்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேத்ரா, அவிக்னா, தருணிக்கா, கயூரிக்கா, பூர்விக்கா, ஆர்யன், அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தட்சணாதன் இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்