Clicky

30ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAY 1943
இறப்பு 23 APR 1996
அமரர் மகேஸ்வரி மகாதேவன் 1943 - 1996 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி மகாதேவன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 30 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா

நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா..!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்