யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா செல்வரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!
விளையாட்டுப் பிள்ளை நீ
என்றும் வினை தேடிச்சென்றதில்லை…!
செல்வங்கள் நிறைந்த எங்கள்
செல்வரூபன் நீ…!!
உன்னை உறுத்துவோரை கூட
மனம் வருத்தாது
உதட்டோரம் புன்னகை தெளித்து
கடந்து போகும் உன்னதன் நீ…!
நேற்றுப் போல இருக்கின்றது
காலனிடம் உனை
தோற்றுப்போய் பறிகொடுத்து,
பரிதவித்து நிற்கின்றோம்…!
முப்பத்து ஏழு வருட நம் நட்புக்குள்
ஏழு ஜென்ம பந்தம்...!
நட்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள்
நாம் ஓன்று சேர்ந்து நின்றோம்..!!
கடல்கடந்து சென்றபோதும்
கரை தட்டிடாதது உனது நட்பு
விரைவாக எங்களை நீ
விட்டுச் சென்றதேனோ?
ஆண்டொன்று ஆகியும்,
ஆற மறுக்கிறது எங்கள் மனம்
மீண்டு வருவாயா என
ஏங்கித் தவிக்கின்றோம்…!
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்...!!
என்றாவது ஒருநாள்,
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
எம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!
It's been exactly a year since you left my dear Ruban I have no words to express how I feel So many unanswered questions. So many dreams. 2019 was supposed to be my best year but all that's left...