யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ராஜரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அன்பு தாத்தா, நீங்கள் யாவருக்கும் ஓயாமல் செய்த நன்மையால் நாங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்போம். என்றும் அன்புடன் உங்கள் பேரப்பிள்ளைகள், கென், கீத், கேட்