Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 FEB 1951
இறைவன் அடியில் 16 MAY 2024
அமரர் மகாலிங்கம் திலகவதி 1951 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்கிளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் திலகவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அம்மாவே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழி நடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் அழியாது அம்மா

எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்

பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே

எங்கள் குடும்பத்தின் குல விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 17 May, 2024