
யாழ். கீரிமலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும், கீரிமலையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் தர்மபூபதி அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கட்டையர், சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வன்னிக்குட்டி, கொத்தியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(வண்டில் காரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்(அப்புலிங்கம்- முன்னாள் தொழில் அதிபர்), ஜெகதீஸ்வரி(தங்கா) மற்றும் விஜயகுமாரன்(சின்னன்னை- சுவிஸ்) , காலஞ்சென்ற விஜயலட்சுமி(வண்ணம்- ஜேர்மனி), சந்திரகலா(கலா- கொழும்பு), காலஞ்சென்ற மகாராஜா(அப்பன் - பிரித்தானியா), பிரபாகரன்(குஞ்சன் - பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு ராசமணி, குனேஸ்வரி தர்மராஜா மற்றும் நகுலேஸ்வரி நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவிகா முருகையா(தங்கவேல்), சங்கீதா, குணபாலசிங்கம், தவபாலசிங்கம், நிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தசாங்கன் கிருத்திகா(கோகுலன்), லோகனா(சதீஸ்), சர்மிளா(சிந்துஷன்), பிரவீனா, பிரசன்னா, பிருந்தா, பிரியன், பிரவீன், பிரதீபன், ஜீவிதன், பிரித்தி, பிரித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கஸ்வீன், சங்கவி, தர்சிகன், துவிசாளினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details