Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 FEB 1932
ஆண்டவன் அடியில் 20 AUG 2022
அமரர் சொர்ணம்மா மகாலிங்கம் 1932 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், பெரியமாவடி, முல்லைத்தீவு வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சொர்ணம்மா மகாலிங்கம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணர் மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்விழி(ஜேர்மனி), சொர்ணலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கயல்விழி(கனடா) மற்றும் பாஸ்கரலிங்கம்(முருகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதாஸ்(ஜேர்மனி), கலாவதி(கனடா), ஸ்ரீபதி(கனடா), பேரின்பவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா- பிரசன்னா(ஜேர்மனி), கிருசாந்- சப்ரீனா(ஜேர்மனி), கீர்த்திகா(ஜேர்மனி), சங்கவி(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பிரணவன்(கனடா), சிவகாமி(கனடா), லோகிதன்(சுவிஸ்), புவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

லியானா(ஜேர்மனி), மீலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, பரமேஸ்வரி மற்றும் இந்திராதேவி(சங்கத்தானை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கனகசபை(தியாகு), காலஞ்சென்ற சொக்கலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புச் சகலியும்,

நந்தகோபன், நந்தகோகிலா, பாமினி, யாழினி ஆகியோரின் அன்பு மாமியும்,

கௌரி, சசி, கிரித்திகா, தியாகேந்திரா, பிரியதர்ஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சிவசுதன், அருட்சோதி ஆகியோரின் அன்பு குஞ்சம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பாஸ்கரலிங்கம்(முருகன்) - மகன்
மலர்விழி சந்திரதாஸ் - மகள்
சொர்ணலிங்கம் - மகன்
இந்திராதேவி - சகோதரி

Photos

Notices