யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீலாம்பிகை மகாலிங்கம், மகாலிங்கம் மைதிலி, மகாலிங்கம் மஞ்சுளா, மகாலிங்கம் மாலதி, மகாலிங்கம் மேனகா ஆகியோர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
ஆயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும்
அன்று நீங்கள் ஆழ்கடலில் பயணமானீர்கள்
ஆயிரத்தில் ஒன்றாக ஆண்டவனும் கனவு
கண்டானோ உங்களை அழைப்பதன்று
அன்று யார் நினைத்திருப்பார் இப்படி
நடக்குமென்று ஆனாலும் ஆழ்கடலில்
நாமும் உடனிருந்தோம் உங்களுடன்
மரணித்தோம் மீண்டும் உயிர்பெற்றோம்,
உங்களுக்காய் உருவெடுத்தோம்,
உங்களுக்கும் உயிர் கொடுத்தோம்,
உங்களின் கனவுகளை நிஜமாக்கிடுவோம்,
இனி எதிர்த்து நின்றால் இறைவனையும்
அழித்திடுவோம், இது தொடர்கின்ற
ஜென்ம பந்தம் 27 வருடமல்ல
இருபது ஜென்மங்கள் கடந்தாலும்
தொடர்ந்து வருவோம்
உங்களுக்குத் துணையாக...!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
ராகவன் மற்றும் ரமணன் குடும்பத்தினர்