Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1960
இறப்பு 22 FEB 2022
அமரர் மகாலிங்கம் சந்திரகுமார் 1960 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, Germany Dortmund, லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் சந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:11/02/2023

எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!

அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்

ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!

பார் போற்ற மூவர் பெற்று விட்டு
பெற்றவர், மனைவி, உற்றவர் கண் குளமாக சென்றீரே!
கண்கண்ட பேரர்கள் கதறியழ
காணா இடம் சென்று மறைந்தீரே!

தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!  

ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா! அப்பா! என்றழைக்க எம் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை...

அழியாத உங்கள் இனிய முகமும் எம்
நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன!!!
அழுது புரண்டென்ன!!!
மறைந்து போன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ..!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Feb, 2022