10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகாலக்ஷ்மி தர்மலிங்கம்
1939 -
2016
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலக்ஷ்மி தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்.
நீங்கள் வாழ்ந்த மண்ணிலே
நீங்காத பெருமை தேடி பிள்ளைகள் எம்மையும்
நல்வழி காட்டியே நானிலம் போற்றும் பண்பில்
உருவாக்கிய தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute