

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:25/09/2023.
எங்கள் குடும்பத்தின் அணையாத தீபமேன
எண்ணி இருந்த எமதன்புத் தெய்வமே
ஆரூயிர் அன்னையே
எங்கள் பாசத்தின் திருவுருவே “அம்மா”
குடும்ப குல விளக்கு மறைந்து
ஆண்டொன்று ஆனதே!
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உடம்பில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் தவிக்க நெஞ்சம் துடிக்க
மறைந்து சென்றாய் ஏனம்மா!
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
நீ எம்மருகில் இருக்கையில் துணிவாக நின்றிருந்தோம்
இன்று தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே!
அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா
இணையில்லா தெய்வமே எம் தாயே
அருகிலிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ?
மறுபிறவி எடுத்து மண்ணில் வந்து
மீண்டும் எங்களுடன் சேர்வாயா அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்..!
My deepest condolences, from Leela family.