11ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாதவன் சின்னத்தம்பி
(குமாரப்பா)
மனையடி சாஸ்திரியார்
வயது 83
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாதவன் சின்னத்தம்பி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும்
சுழல்கிறதே ஐயா!
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute