கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு அமிர்தலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தொடர்ந்து 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை De Krakeling Schor 15, 8224 CM Lelystad இல் அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையுடன் மதிய போசன நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாய் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Rest in Peace அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன்,அவரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பகிர்ந்துகொள்வதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.