

திருச்சி மாவட்டம், இலுப்பையூர் கிராமம், கொழும்பை பிறப்பிடமாக கொண்ட மாரிமுத்துபிள்ளை சண்முகநாதன் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை(KMK) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை, சகுந்தலாதேவி அவர்களின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,
சயுக்ஷனா, நிவேனியன், ஸ்ரீ நித்திஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, கிருஷ்ணவேனி, புஸ்பராஜ், தில்லைநாதன்(நவினாஸ் - அத்தார் மஹால் சுப்பர் மார்க்கட், கெய்சர் வீதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிதம்பரம், ஜெகநாதன்(ஸ்டார் பெஷன்), கமலேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜ்குமார், தங்கராஜின் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-11-2019 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் பொரளை லங்கா புளோரிஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு மாலை 05:00 மணியளவில் பொரளை கனகத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.