Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1929
இறப்பு 05 JUN 2020
அமரர் லக்சுமி சிவபாதம்
தமிழ்ப் பண்டிதர், இளைப்பாறிய ஆசிரியை மற்றும் கொழும்பு சைவ மங்கையர் கழக ஆரம்பப் பாடசாலைத் தலைமையாசிரியை
வயது 91
அமரர் லக்சுமி சிவபாதம் 1929 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி சிவபாதம் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கந்தையா சிவபாதம்(Melbourne, ஸ்ரீலங்கா சமாதான நீதவான், Senior Finance Executive- Sterling Winthrop LTD, SriLanka) அவர்களின் நேசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, தங்கமுத்து ஆகியோரின் இளைய அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசொரூபன்(பிரான்ஸ்), சக்திசொரூபன்(பொபி- பிரான்ஸ், லண்டன்), நிருத்தசொரூபி(Melbourne), நாதசொரூபன்(கொழும்பு), அனந்தசொரூபன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மகுலேந்திரன்(Melbourne), ரஜனி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

சக்தியாகினி, சாரங்கன், ஜோதி, நதர்ஷன், சொரூசன், சத்தியா ஆகியோர்களின் பாசமிகு அப்பம்மாவும், தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 04 Jul, 2020