யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூர்து மேரி பிரான்சிஸ்கம்மா சுவாமிநாதன் அவர்கள் 03–09–2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி பறநாந்து பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மடுத்தீன் சுவாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்திரிசியார்(ஜெயம் - மண்டைதீவு), காலஞ்சென்ற ஜெயரட்ணம்(வலன்டைன் - ரொறன்ரோ) மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றீற்றம்மா(மண்டைதீவு), மதி(ரொறன்ரோ), றுபினா(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மேரி றோசலின்(ராசம்), சந்தானா இன்னேசம்(செல்லக்கண்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வலன்ரீனா, யூலினா, ஜொவிற்றா, றோசிற்றா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பீற்றர்(றொறன்ரோ), செல்வமலர்(கொழும்பு), செல்வராஜி(மாதகல்), செல்வ நேசம்(லன்டன்), செல்வ பிறேமா(மாதகல்), செல்வ நிலா (மாதகல்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.