Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 OCT 1937
இறப்பு 02 APR 2013
அமரர் லூக் ஆரோக்கியசாமி
வயது 75
அமரர் லூக் ஆரோக்கியசாமி 1937 - 2013 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த லூக் ஆரோக்கியசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்"
-உபாகமம் (26:6)

குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே

வரமாக எமக்கு கிடைத்த தந்தையே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்!

எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices