யாழ். ஊர்காவற்றுறை முகாம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட லூர்துமலர் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஐ கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவுகள்...
குல விளக்கு அணைந்ததம்மா!
குடும்பத்துடன் கூடிக்குலாவிய நீ
நொடிப் பொழுதில்
எங்கே சென்றாய் அம்மா?
கருவிலும் சுமந்தவள் கனவிலும் சுமந்தவள்
இறப்பிலும் எம்மை நினைத்தவள் நீ அம்மா.
பேராசை இல்லாத பாசம் அதிகம் வைத்தாய்
ஒளிவு மறைவு இல்லாத உன் ஒப்பற்ற பேச்சை
இனி எபோது கேட்போம் அம்மா.
வாழ்வில் பல வினைகள் உனைத் தொடரினும்
தளரா மனதுடன் இறைவனோடு செபித்தாயே
உன்னோடு கூடி வாழ்ந்த காலம் ஓர் பொற்காலம்
உன்னிழப்பால் ஓடி ஒழிந்ததம்மா..
காற்றைப் போல் கண்களுக்கு தோன்றாமல் நிற்கின்றாய்
தோற்றுப் போனது எம் பாசம் எல்லாம் உன் முன்னால்...
கண்ணுறங்கும் வேளையிலே
விண்ணவனும் வருந்தியழைத்தானே
நொருங்கியது எம் உள்ளம்
விழிநீர் வற்றும் வரை அழுதுவிட்டோம்
உம்மை எண்ணி அம்மா...
இறுதியாக உன்னை மண்ணில் மறைக்கும் நேரம்
விண்ணிலிருந்து சொரிந்த தேவதைகளின் கண்ணீர்
மழையாக எம்மேல் விழ
உறைந்துவிட்டோம் சில நொடிகள்
நினைத்துப் பார்த்தோம் எம்மனத்திரையில்
விட்டுவிடவில்லை நீர் செய்த நற்காரியங்கள்...
நியம் என்பதை தொலைத்தாலும்,
என்றும் நிழலாய் தொடரும்
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I know you must be feeling a lot of pain right now, but I want you to know that God is always with you and you are also in our prayers. Receive my deepest condolences