10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லோகேஸ்வரி சண்முகபவன்
வயது 73
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோகேஸ்வரி சண்முகபவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்...
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்