10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கநாயகம் சாரங்கன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புச் செல்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா
நீ இல்லாதது எம் இதயமே இருண்டதய்யா
காலம் செய்த கோலமய்யா
கடவுள்கூட இரங்கவில்லையப்பு
என்ன பாவம் செய்தேனோ?
நானறியேன் என் செல்வமே!
உனை இழந்து துடிக்கும் துடிப்பு
உன் காதில் கேட்கிறதா?
என் செய்வேன் என் செல்வமே
பொன்னான என் பிள்ளை
மண்ணாகிப் போச்சுதையா
நான் ஆசையாக வளர்த்த ஒரு
கூட்டுக் கிளியாக நாங்கள் எல்லோரும்
ஒன்று சேர்ந்திருந்தோமே
என் கடைக் குட்டியே நீ
மீண்டும் எம்மிடம் வருவாயென
எதிர் பார்த்து நிற்கின்றோம்
உன் பிரிவால் துயருறும்
தகவல்:
குடும்பத்தினர்