

யாழ். தெல்லிப்பழை வீமான்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட லில்லி அன்னமலர் செல்லையா அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றொபேர்ட் செல்லையா, மேரி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசிதம்பி செல்லையா(உபதேசியர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருபைராஜா செல்லையா(கிருபைராஜா மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நேசமலர், ஜோதினி(இந்தியா), Dr. சுருபினி(சுகாதார அமைச்சு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலபிள்ளை(Pulse Telesystems நிறுவனம்- இந்தியா), சுரேஸ் சாமுவேல்(அதிபர்- Faith School) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான றோஸ்(Teacher), Dr.C.P துரைசிங்கம்(லண்டன்), D.C ரத்தினசிங்கம், தேவி(Teacher) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹிரோஷன்(இந்தியா), பிறிஸில்லா, கெர்ஷோன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-03-2019 செவ்வாய்க்கிழமை முதல் 06-03-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இலங்கை பெந்தெகொஸ்தே சபை ரொட்றிகோகுடம் மட்டக்குளி கொழும்பு 15 எனும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our heartfelt condolences Jothini and her soul rest in peace.