நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லெப்.கேணல் மைதிலி என்றழைக்கப்பட்ட சாந்தி வேலும்மயிலும் அவர்களின் 21ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
வீட்டுப் பெயரை மறந்து
நாட்டுக்காக பெயர் சூட்டப்பட்டு
அயராது துணிவுடனும் பொறுப்புடனும்
களமாடிய மைதிலியே...!
மறவாதே தமிழினமே
தமிழ்க்குடி தன்குடிலில் கூடி வாழ
தம் உயிர்க்கொடை கொடுத்தவரை
நம் உயிர்கள் மறக்குமா?
தாயின் மணிக்கொடி தமிழீழத்தில்
ஏறும் பொழுதில் ஈழம் கீதமிசைக்கும்
தீரும் மாவீரர் விடுதலைத் தாகம்- அன்றே
மாவீரர் உறவுகளின் மனமும் ஆறும்.
உன் சாதனைகள் தமிழரின்
வரலாற்று பதிவுகள்
எங்கள் நெஞ்சங்களில் அவை
அழியா நினைவுகள்....
கல்லறைதனில் நிம்மதியாக
கண்கள் மூடி உறங்கு
ஈழம் மீண்டும் மலரும்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP - Thanks for your service to our land.