நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் ஈழவன் என்றழைக்கப்பட்ட ஞானசேகரம் ஞானக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
மறவாதே தமிழினமே
தமிழ்க்குடி தன்குடிலில் கூடி வாழ
தம் உயிர்க்கொடை கொடுத்தவரை
நம் உயிர்கள் மறக்குமா?
வண்ண முகம் காட்டாயோ - நீ வந்து
வாய் திறந்து ஒரு சொல் பேசாயோ
கண்ணிலிருந்து கரையும் கண்ணீரை
உன் கரங்கொண்டு துடைத்திட
மாட்டாயோ நீ..
காலம் நம் கை கூடாமல் போகாது மாவீரர்
கனவுகளும் மெய்ப்படாமல் போகாது
தாயின் மணிக்கொடி தமிழீழத்தில்
ஏறும் பொழுதில் ஈழம் கீதமிசைக்கும்
தீரும் மாவீரர் விடுதலைத் தாகம்- அன்றே
மாவீரர் உறவுகளின் மனமும் ஆறும்..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்