
யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சற்கோட்டையை வதிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு லூர்த்தம்மா அவர்கள் 30-01-2019 வியாழக்கிழமை அன்று சற்கோட்டையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் லேனா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தொம்மை லீனப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிஸ்டெல்லா(பிரான்ஸ்), டேவிட்(இலங்கை), காலஞ்சென்ற பெனெடிற், விமலராணி(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை, ஞானம்மா, ஆகத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(தம்பிதுரை), மெற்றில்டா(இலங்கை), மேரி கிறிஸ்டி(குஞ்சு), கசில்டா சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கொன்ஸ்டன்ரைன் வர்ணசீலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரி கிளமென்றா வனிதவதி, அருட்தந்தை றொட்ரிகோ வசந்தசீலன்(பிரான்ஸ்), மேரி நிஷாந்தினி(இலங்கை), மிரோல்ட்(நெதர்லாந்து), மயூலிக்ஸ்(இலங்கை), ஸ்டெபானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
புனித செல்வி(நிலா- ஜேர்மனி), பவித்திரன்(இலங்கை), கிருஷ்ணிகா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கொன்செலன், கொன்ஸ்விக், ரிபிக்சன், லோகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-02-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஊறணி தூய அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தூய அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி லீனப்பு லூர்த்தம்மா அவர்களின் மறைவையிட்டு மிகுந்த துயரத்துடன் இருக்கும் டேவிட் அங்கிள், தங்கா அன்ரா, நிசாந்தினி மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை இராசதாசன்...