Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1941
இறப்பு 17 AUG 2025
திருமதி இலட்சுமணபிள்ளை வரதலட்சுமி 1941 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கு மூன்றாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும், புதுக்காடு இராமநாதபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணபிள்ளை வரதலட்சுமி அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இலட்சுமணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வடிவழகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி, இராசம்மா, குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருபாகரன்(ஆசிரியர்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி), வசந்தா(சுவிஸ்), வனஜா(சாந்தி- புதுக்காடு), ரேணுகா(திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயம்), சிவகுமார்(சுவிஸ்), கிருஷ்ணசீலன்(சீலன்- புதுக்காடு), கனகசிங்கம்(முன்னாள் அதிபர்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யா(விவசாய போதனா ஆசிரியர்- புளியம்பொக்கனை), சரண்ராஜ், ஜனார்த்தனன், ரம்யா, சிந்துஜா, இலக்கியா, துவாரகன், சாதனா, சங்கவி, விதுஷா(கனடா), கௌசிகன்(ஆசிரியர்- வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்), நிலவன், தனுஷா, ஜனகன், கனிமொழி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்ஷரா, ஆதிரா, வைஷ்ணவி, ஆதித்தன், ஆத்மிகா, ஆதிரா, பென்சி, தாரிகா, தோயஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் புதுக்காடு இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தா - மகள்
வனஜா(சாந்தி) - மகள்
ரேணுகா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute