Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1950
இறப்பு 28 APR 2021
அமரர் லோட்டன் லயனல் ராஜகுமார் (குமார்)
சண்டிலிப்பாய் எரிபொருள் நிலைய உரிமையாளர்
வயது 70
அமரர் லோட்டன் லயனல் ராஜகுமார் 1950 - 2021 சங்குவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை”
                                                                       -கவிஞர் வைரமுத்து 

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

 அன்னாரின் 1ம் ஆண்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 18-04-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்,அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது உயிர் அமைதி வழிபாட்டிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு ஓடிவந்தோருக்கும் உடனிருந்து உதவியோருக்கும் தொலைபேசி மூலமும் இணைய வழியூடாகவும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் லங்கா ஸ்ரீ மூலம் அஞ்சலி செலுத்தியோர்களுக்கும் தொடர்ந்து ஆறு நாட்களும் துக்கத்தில் கைகொடுத்தோருக்கும் அந்தியேட்டி வரை உணவு, நீராகாரம் வழங்கியவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள், மலர் வளையங்கள், பதாகைகள் வெளியிட்டோருக்கும் அவர் சுகயீனமுற்றிருந்து எட்டு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்த வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் அனைவருக்கும் அவரது உடலை பாதுகாப்பதற்கு பதப்படுத்த உதவிய White House நிறுவனத்தினருக்கும் அவரின் இறுதிச்சடங்கின் போது அவரது விருப்பப்படி பாடை கட்டி உதவிய சங்குவேலி இளைஞர்களுக்கும் அதனை அலங்கரிக்க தேவையான இயற்கை மலர்களை பெற்றுத்தந்த மெடோனா பூச்சேவையாளர்களுக்கும் இறுதிக்கிரியைகளின் போது வழிநடத்தி உதவியவர்களுக்கும் அஞ்சலி உரை வழங்கியோருக்கும் இவரது மரணச்சடங்கு பெருந்தொற்றுக் காலமாக இருந்தபோது சடங்குகளை சிறந்த முறையில் நடத்த உதவிய சகல சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் இறுதிநிகழ்வின் போது கீழைத்தேய, மேலைத்தேய வாத்தியங்களை இசைத்தவர்களுக்கும் இறுதிஊர்வலத்தில் அன்னாரை தாங்கிய பாடையினை கால்நடையாக காட்டுப்புல மாயனம் வரை காவிச்சென்ற அனைவருக்கும் அதனைத் தொடர்;ந்து இடம்பெற்ற அனைத்துக் கிரியைகளையும் நடாத்த வழிநடத்தி உதவியவர்களுக்கும் அதில் பங்கேற்றவர்களுக்கும் இவ் இறுதிக்கிரியை நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப உதவிய துயர் பகிர் நிறுவனத்திற்கும் அத்துடன் (18.04.2022) நடைபெறும் அவரது ஓராண்டு நினைவுத் திதியின் போது கலந்து கொள்வோருக்கும் உதவி புரிபவர்களுக்கும் இத்தருணத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி!!!

குறிப்பு:-

எமது குடும்பத் தலைவரின் ஈமைக்கிரியைகளின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் இவ் அழைப்பையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றோம்…

எங்கள் குடும்பத்தினரால் தனிப்பட்ட ரீதியாக அழைப்பிதழ் வழங்க தவறியவர்களும் இவ் அழைப்பை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்…

வீட்டு முகவரி:
சங்குவேலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Apr, 2021
நன்றி நவிலல் Thu, 27 May, 2021