ஜேர்மனி Hanau ஐப் பிறப்பிடமாகவும், Freigericht Somborn ஐ வதிவிடமாகவும் கொண்ட லாவண்யா யோகேந்திரன் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், Freigericht Somborn யைச் சேர்ந்த யோகேந்திரன்(ஜனார்த்தனன்) ரோகினி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
நிரூசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரேசா அவர்களின் அன்புத் தாயாரும்,
கந்தர் உடையார் ஒழுங்கை பருத்தித்துறையைச் சேர்ந்த கனகராசா(தபாலதிபர்) பரமேஸ்வரி தம்பதியினரதும், மல்லிகைக் கலட்டி தம்பசிட்டி பருத்திதுறையைச் சேர்ந்த சுந்தரராசா(நில அளவையாளர்) பிறேமலதா தம்பதியினரதும் அன்புப் பேத்தியும்,
கனகாம்பரம்(கொழும்பு- இலங்கை)- காலஞ்சென்ற மல்லிகா, பரமேஸ்வரன்- மாலா(அச்சுவேலி), காலஞ்சென்ற இரவீந்திரன், மங்களா(உயிலங்குளம்)- காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, பாஸ்கரன்- சயந்தனி(Edmonton- பிரித்தானியா) ஆகியோரின் பெறாமகளும்,
ஞானசௌந்தரி(கொழும்பு- இலங்கை)- காலஞ்சென்ற சிவராசா, சிவதேவி(கனடா), இரவிக்குமார்- யோகேஸ்வரி(கொழும்பு- இலங்கை), நகுலேஸ்வரன்(ராசன்)- மங்களசௌந்தரி(Frankfurt ஜேர்மனி), கேதீஸ்வரன் - துஸ்யந்தி(Southend பிரித்தானியா), மிரதன்- கஸ்த்தூரி(Dartford- பிரித்தானியா), மனோஜ்பிரசஞன்- லக்மாலி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.