Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 31 JAN 1974
உதிர்வு 22 JUL 2014
அமரர் லதா பரணிதரன் 1974 - 2014 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Stabio ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லதா பரணிதரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அம்மாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!

பத்தாண்டுகள் சென்றிருந்தால் என்ன
அம்மா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுதம்மா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அம்மா!

பாசத்தின் கருவியாய்
பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய்
எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம்
காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக்
காத்த எம் தெய்வமே!

அலை அலையாய் வரும் கடல் கூட
வெயிலில் வற்றி விடும்.
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு
எங்களை பித்தம் கலக்க வைக்கிறது...

பத்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices