1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
15 MAR 1956
இறப்பு
11 DEC 2019

அமரர் லலிதாவதி சுப்பிரமணியம்
1956 -
2019
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிதாவதி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயிலிலே
மனை சிறக்க வாழ்ந்த - எம்
அன்னையேஓராண்டு காலம்
உருண்டோடிப்போனாலும்
உங்கள் அழியாத நினைவுகள்
நீங்காது எம் தாயே
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
வேதனைகள் வேர்வரை சென்றாலும்
விழுதுகளாய் எம்மைத் தாங்கினாய்
உன் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள்- உன்
காதுகளில் கேட்கிறதா
உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய்
பணம் தேடி அலையும்
பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட
யார் உள்ளனர் இப் பூமிதனில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 12 Dec, 2019
நன்றி நவிலல்
Fri, 10 Jan, 2020
Request Contact ( )

அமரர் லலிதாவதி சுப்பிரமணியம்
1956 -
2019
கோண்டாவில், Sri Lanka
He who has gone, so we but cherish his memory, abides with us, more potent, nay, more present than the living man Mr and mrs thiruvilangam sivasothimalar urumpirai